தடுப்பூசி செலுத்துவதில் முதல் 10 மாநிலங்கள் - முதல்முறையாக டாப் 10ல் தமிழகம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு தழுவிய அளவில் முதன் முறையாக முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை தற்போது பார்க்கலாம்...
x
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு தழுவிய அளவில் முதன் முறையாக முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை தற்போது பார்க்கலாம்... இந்தியாவில், ஜூன் 18 காலை வரை, 26 கோடியே 89 லட்சம் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. 21 கோடியே 88 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 5 கோடியே 86 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விதிகம் 15.74 சதவீதமாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 3.59 சதவீதமாக உள்ளது.12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 17.29 சதவீதமாக உள்ளது. 24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 2 கோடியே 46 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 8.58 சதவீதமாக உள்ளது.6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 2 கோடியே 12 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 25.66 சதவீதமாக உள்ளது.8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 20.48 சதவீதமாக உள்ளது.10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 1 கோடியே 84 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 14.2 சதவீதமாக உள்ளது.
6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 1 கோடியே 78 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 21.52 சதவீதமாக உள்ளது.8 கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 1 கோடியே 49 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 14.82 சதவீதமாக உள்ளது.12 கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 1 கோடியே 29 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 8.58 சதவீதமாக உள்ளது.5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 1 கோடியே 24 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 17.83 சதவீதமாக உள்ளது. 7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில்,  இதுவரை 1 கோடியே 18 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 12.22 சதவீதமாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்