தடுப்பூசி போட அச்சப்படும் மலைவாழ் மக்கள் - அதிகாரிகள் வீடு வீடாக சென்றும் பலன் இல்லை

கன்னியாகுமரி அருகே சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும், மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசியை புறக்கணித்து வருகின்றனர்.
x
கன்னியாகுமரி அருகே  சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும்,  மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசியை புறக்கணித்து வருகின்றனர்.குமரி மாவட்டத்தை சேர்ந்த மலையோர பகுதிகளான  பேச்சிப்பாறை, கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட பகுதிகளில் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்தினர். மலையோர பகுதிகளில் சுகாதாரத்துறையுடன் தன்னார்வலர்கள், தனியார் சமூக அமைப்புகள் இணைந்து வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டு நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி போடுவது குறித்த அச்சத்தை போக்கும் விதமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டது. இந்த நிலையிலும் தச்சமலையில் 1500 க்கு மேற்ப்பட்டோர் வசித்துவரும் நிலையில் தற்போது 12 பேர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்