தடுப்பூசி போடும் தமிழகம் - தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
x
 காலை முதல் காத்திருந்து தடுப்பூசி மையங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பற்றாக்குறை காரணமாக சில இடங்களில் சலசலப்பும் ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் காணப்பட்ட நிலையில், அரசின் விழிப்புணர்வு நடவடிக்கையை அடுத்து தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடுப்பூசிகள் விரைந்து காலியாகிறது. அதிகாலை முதலே மக்கள் தடுப்பூசி மையங்கள் முன்பாக காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் முகாமில் 400 டோஸ்கள் மட்டும் செலுத்தவிருந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். சாலையின் ஓரமாக மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சமூக இடைவெளியுடன் வரிசையாக காத்திருந்தனர்.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் அளவுக்கு அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டதால் டோக்கன் வழங்க முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் தவித்தனர். அப்போது டோக்கன் கிடைக்காதவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தடுப்பூசி மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இருப்பில் 430 டோஸ்கள் மட்டுமே இருந்த நிலையில், மக்களிடம் மருத்துவர் நிலையை எடுத்துரைத்தார். அவர் சமாதானம் செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்மதுரையில் ராஜாஜி மருத்துவமனை அருகே இளங்கோ பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கும் காலையிலே குவிந்த மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை செலுத்திச் சென்றனர்.கும்பகோணம் நகராட்சி  காரனேசன் மருத்துவமனையில்  தடுப்பூசி போட்டுக்கொள்ள நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படவிருந்த நிலையில் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்கள் ஒருவருக்கு, ஒருவர் முந்திக்கொண்டு சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்