சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - சிறப்பு உணவாக சிக்கன் கறி, மட்டன் சூப்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...
x
நூற்றாண்டு காலமாக மனித இனம் சந்தித்திராத மாபெரும் பேரழிவை நிகழ்த்திக் கொன்டிருக்கும் கொரோனா, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை...வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த 14 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது....போதாததற்கு, கடந்த 3ம் தேதி, நீலா என்ற 9 வயதே நிரம்பிய பெண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நம்மை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது...
இதனால் உடனடியாக மீதமிருந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....இதில், 23 வயதான கவிதா மற்றும்19 வயதான புவனா ஆகிய சிங்கங்களுக்கு, உடல்நிலை சற்று மோசமான நிலையில், அவற்றிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...இந்நிலையில், 4 புலிகள், மறுவாழ்வு மையத்தில் இருந்த 2 சிங்கங்கள் மற்றும் இறந்து போன நீலா ஆகியவற்றின் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன...பரிசோதனை முடிவில், மேலும் ஒரு சிங்கத்திற்கு பூரண பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது...இதனால் இறந்த சிங்கத்துடன் சேர்த்து மொத்தம் 10 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது..."Squeeze cage" என்ற கூண்டுகளில், கொரோனா பாதித்த சிங்கங்கள் அடைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்...மனிதர்களாகிய நமக்கே லேசான காய்ச்சல் என்றாலும் உணவு உள்ளே போகாது... அப்படியிருக்க, கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் வாயில்லா ஜீவன்களாகிய கவிதாவும், புவனாவும் உடல் நல பாதிப்பால் உணவுகளை ஒதுக்கி வந்துள்ளன...இதனால், தீர யோசித்த மருத்துவர்கள், இருவருக்கும் மட்டன் சூப் வழங்க முடிவு செய்தனர்...இதனைத் தொடர்ந்து 2 நாட்களாக, மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், கவிதாவும் புவனாவும் மட்டன் சூப்பை ரசித்து ருசித்துக் குடிப்பதோடு, சிக்கன் கறியையும் விரும்பி உண்டு வருகின்றனர்...தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட சிங்கங்களின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், விரைவில் விலங்குகள் கொரோனா தொற்றிலிருந்து விடுபடும் என பூங்கா நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்...

தந்தி டிவி செய்திகளுக்காக செய்தியாளர் மீரான் 


Next Story

மேலும் செய்திகள்