இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - 6வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பாதிப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று 80 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
x
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று 80 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 989ஆக  உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 303 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 384ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 62 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 10 லட்சத்து 26ஆயிரத்து 159 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 25 கோடியே 31 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்