ச‌சிகலா ஆடியோ தாக்கத்தை ஏற்படுத்தாது-காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்

சசிகலா அரசியலுக்கு வருவதால், எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
x
சசிகலா அரசியலுக்கு வருவதால், எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா ஆடியோ வெளியிடும் விவகாரம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம‌.மு.க.வுக்கும் உள்ள பிரச்சினை என்றும் இதில் காங்கிரஸ் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் நெடுவாசல் அருகே ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏலம் நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்