கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய விகித வரிதான் நிர்ணயிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க வேண்டும் - நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்
x
கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய விகித வரிதான் நிர்ணயிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரி விகிதத்தை மாற்றியமைப்பதில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும் ஆம்புலன்ஸ் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்