"தமிழ்நாட்டிற்கு 4500 மெ.டன். ஆக்சிஜன்" - இந்திய ரயில்வே அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு 4500 மெ.டன். ஆக்சிஜன் - இந்திய ரயில்வே அறிவிப்பு
x
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,  ஆயிரத்து 684 டேங்கர்களில் சுமார் 29 ஆயிரத்து 185 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
409 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 28 டேங்கர்களில் சுமார் 551 மெட்ரிக் டன்  ஆக்சிஜனுடன் 7 ரயில்கள் பயணித்துக் கொண்டிருப்பதாக, இந்திய​ ரயில்வே கூறியுள்ளது. தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு முறையே 3 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் ஆக்​சிஜனும் வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்