கோவாக்சினுக்கு அமெரிக்க மருந்து நிர்வாக ஆணையம் மறுப்பு

கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து நிர்வாக ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
x
கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து நிர்வாக ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உள்ள கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் உற்பத்தி செய்ய ஒகுஜன்(Ocugen) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி ஒகுஜன் நிறுவனம் விண்ணப்பித்த‌து.ஆனால், கோவாக்சினை அவசர கால பயன்பட்டிற்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து நிர்வாக ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், கூடுதல் தரவுகளுடன் முழுமையான பயன்பாட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த ஆணையம் தெரிவித்து உள்ளது.

*முன்னதாக அமெரிக்காவில் இனி எந்த தடுப்பூசியும் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில்,இது குறித்து கருத்து தெரிவித்த ஒகுஜன்(Ocugen) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் கொண்டு வர உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்