ஆம்புலன்ஸ் டயர் வெடித்து விபத்து - கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
x
கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... 

இன்றளவும் உடனே கிடைக்க வேண்டிய மருத்துவ உதவி கிடைக்கப்பெறாமல் அல்லோல்பட்டு உயிரிழக்கும் கிராம மக்களின் நிலை பரிதாபத்தின் உச்சம்... 

அதுவும் மருத்துவ உதவியை நாடி பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய நிலையில்,  உயிர்காக்க விரைந்த ஆம்புலன்ஸே மூன்று உயிர்களை பறித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 


ஜெயலட்சுமியின் தாயார் 

சங்கராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த 23 வயதான நிறை மாத கர்ப்பிணி ஜெயலட்சுமிக்கு பிரவச வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட ஜெயலட்சுமி, அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால்  கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.. 


கவியரசன் ஜெயலட்சுமியின் அண்ணன்

மருத்துவமனைக்கு செல்ல 45 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்ற நிலையில், ஆம்புலன்சில் ஜெயலட்சுமியுடன் மாமியார் செல்வி நாத்தனார் அம்பிகா,  புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர் மீனா மற்றும் 108 உதவியாளர் தேன்மொழி ஆகியோர் பயணித்துள்ளனர். ஆம்புலன்சை கலிய மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

இந்தநிலையில் தான் அதிகாலை 4.30 மணியளவில்  
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூரில் ஏரிக்கரையில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, மரத்தின் மீது மோதி ஆம்புலன்ஸ்  விபத்துக்குள்ளானது.. 

இதில் பிரசவத்திற்கு முன்னரே நிறைமாத கர்ப்பிணி ஜெயலட்சுமியுடன் அவரது மாமியார் மற்றும் நாத்தனாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்... மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உட்பட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏழுமலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 

ஆனால் டயர் வெடித்திருந்தால் ஏற்பட கூடிய சேதங்கள் வாகனத்தில் இல்லை என்பதால் இந்த விபத்திற்கு ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், இது குறித்து விசாரித்து வருகிறர். 

ஜியாவுல் ஹக், எஸ்பி, கள்ளக்குறிச்சி 

இந்நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஜெயலட்சுமி குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து வயிற்றுக்குள் இருந்த குழந்தை உட்பட நான்கு பேரை காவு வாங்கியுள்ள செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்