முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பெற்ற மனுக்கள் - 100 நாட்களுக்குள் தீர்வு என உறுதி

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பெற்ற மனுக்கள் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றது.
முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பெற்ற மனுக்கள் - 100 நாட்களுக்குள் தீர்வு என உறுதி
x
தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பெற்ற மனுக்கள் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றது.தேர்தல் பிரச்சாரத்தின்போது, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற நிகழ்ச்சி வாயிலாக மாவட்டந்தோறும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற அன்றைய தினமே, "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, அதற்கு சிறப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக ஈரோட்டில் 45 ஆயிரம் மனுக்களும், கோயம்புத்தூரில் 35 ஆயிரம் மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.சென்னையை பொருத்தவரை மொத்தம் பெறப்பட்ட 14 ஆயிரத்து 500 மனுக்களில், 6 ஆயிரம் மனுக்கள் முடிக்கப்பட்டு 4 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.தேர்தலுக்கு முன்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மட்டுமே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், விரைவில் அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்