10ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்ன?

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.
x
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில், 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு வழங்குவதற்கு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மதிப்பெண் சான்றிதழில்,  மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, படித்த பள்ளியின் பெயர் போன்ற அனைத்து விபரங்களும் வழக்கம்போல் இடம்பெற உள்ளதாகவும்,  
மாணவர்கள் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் என்ற இடத்தில், 'தேர்ச்சி' என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதிப்பெண் சான்றிதழ்களை வடிவமைத்து அரசின் ஒப்புதலுக்கு தேர்வுத்துறை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனா தொற்று காலம் என அச்சிட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்