தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை - கொடுங்கையூர் போலீசார் விசாரணை

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
x
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். 

சென்னையை அடுத்த எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் வசித்து வரும் தமிழன் பிரசன்னாவுக்கு, நதியா என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் நதியா வீட்டின் படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
இதுதொடர்பாக, நதியாவின் தந்தை ரவியிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் நதியா இன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் அதை விமரிசையாகக் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டும் எனக் கூறியதாகவும், அதற்கு கொரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு கொண்டாடலாம் என தமிழன் பிரசன்னா மறுத்ததால் மனமுடைந்து நதியா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை தரப்பில் இவர்களுக்கிடையில் வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா? என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்