"தடுப்பூசி கொள்முதல் - மீண்டும் டெண்டர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | COVID19 Vaccine
தடுப்பூசி கொள்முதல் செய்ய, மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய அரசு ஒத்துழைப்போடு செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று கூறினார். உலகளாவிய தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனம் கூட பங்கேற்கவில்லை என்றும், இதில் மத்திய அரசு சொல்லிதான் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என கூறுவது அபத்தமான விஷயம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Next Story
