பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்க முடிவு; இணை நோய் உள்ளவர்கள், ஏழைகள் பெறலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள், தன்னார்வலர்களிடமே பல்ஸ் ஆக்ஸிமீட்டரை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
