படகு கோளாறினால் காணாமல் போன மீனவர்கள் - கடலோர காவல்படை உதவிகோரி முதல்வர் கடிதம்

லட்சத்தீவு அருகே காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, கடலோர காவல்படைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
படகு கோளாறினால் காணாமல் போன மீனவர்கள் - கடலோர காவல்படை உதவிகோரி முதல்வர் கடிதம்
x
லட்சத்தீவு அருகே காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, கடலோர காவல்படைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். 

நாகையைச் சேர்ந்த மீனவர்கள், லட்சத்தீவு அருகே மீன்பிடித்த போது, படகு கோளாறினால், காணாமல் போயினர். அவர்களை மத்திய கடலோர காவல் படையின் உதவியோடு உடனடியாக மீட்டுத்தரக் கோரி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதி இருந்தார். இந்தக் கடிதத்தை, மே21ம் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வழங்கினார். இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக மீனவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தும் வகையில், தேவையான முயற்சிகளை எடுக்குமாறு, கடலோர காவல்படையினரின் தலைமை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
==

Next Story

மேலும் செய்திகள்