ஏழை மாணவர்களுக்கு கல்வியோடு உணவையும் வழங்கும் ஆசிரியை... ஆசிரியையின் சேவைக்கு குவியும் பாராட்டுகள்

சிவகாசி அருகே 1 ஆண்டுக்கும் மேலாக, ஆசிரியை ஒருவர் தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, எழுத்தறிவிப்பதோடு மட்டுமல்லாது பசியைப் போக்க உணவும் அளித்து வருகிறார்.
x
ஏழை மாணவர்களுக்கு கல்வியோடு உணவையும் வழங்கும் ஆசிரியை... ஆசிரியையின் சேவைக்கு குவியும் பாராட்டுகள் 

சிவகாசி அருகே 1 ஆண்டுக்கும் மேலாக, ஆசிரியை ஒருவர் தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, எழுத்தறிவிப்பதோடு மட்டுமல்லாது பசியைப் போக்க உணவும் அளித்து வருகிறார். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதைப் போல, 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி போதிப்பதோடு மட்டுமல்லாமல் இலவச உணவும் அளித்து வருகிறார் தாயில்ட்டியைச் சேர்ந்த ஆசிரியை ஜெயமேரி. இவர் க. மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஊரடங்கு காலத்தில் தன்னுடைய மாணவர்களின் பெற்றோர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதால், உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச உணவை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குகிறார். அத்துடன் 20க்கும் மேற்பட்ட முதியோருக்கும் உணவு வழங்கி வருகிறார். ஆசிரியை ஜெயமேரி தன் வீட்டின் ஒரு பகுதியை பள்ளியாக மாற்றி, மொழி வளம், சிலம்பம், பறை உள்ளிட்ட பல கலைகளையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு வெகுமதியும் வழங்கி வருகிறார். ஆசிரியை ஜெயமேரியின் இந்தப் பொதுசேவை அனைவரின் பாரட்டுகளையும் பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்