49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

காவல்துறையில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
x
அதனடிப்படையில் அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன்,  திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே ஐஜியாக இருந்த வனிதா, திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றப்பட்டுள்ளார்.திருப்பூர் காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும்,தலைமையிட ஐஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் சிபிசிஐடி, ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல நஜ்மல் ஹூடா சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தொழிற்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்த ராஜேந்திரன், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராகவும்,
கோவை சரக டிஐஜியாக இருந்த நரேந்திர நாயர், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று, மத்திய மண்டல ஐஜி ஆகவும்,மதுரை மண்டல டி.ஐ.ஜி உள்ள சுதாகர், பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்