மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்
x
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால்   கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று  மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள்  புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.  

ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மீதமுள்ள
6 நாட்களில் 2 பிரிவாக 3 நாட்கள் வீதம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அங்கு நாளை வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்