மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமல் - மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் இரண்டு பருவமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது,.
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமல் - மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க தடை
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மீன்பிடி தடைக்காலம்  ஆண்டு தோறும் இரண்டு பருவமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது,. கன்னியாகுமரி மாட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, சின்னமுட்டம் ஆகிய இடங்களில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையும் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்,. அதேபோ்ல மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லம்கோடு, நீரோடி ஆகிய பகுதிகளில் மே 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்,.  அதன்படி, மேற்கு கடற்கரை பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது,. இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்