"பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு" - தற்காப்புக்கலை பயிற்சியாளர் மீது புகார்
பதிவு : மே 31, 2021, 03:43 PM
சென்னையில் பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதிநேர கராத்தே பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் வேறு சில பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியராக தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து வந்தார். இவரிடம்  சில ஆண்டுகளுக்கு முன்பாக தற்காப்பு கலை பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லும் போது மாணவிகளிடம் கெபிராஜ் அத்துமீறியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஜூடோ கலை பயிற்சியாளர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.

11 views

2019 -20 உயர்கல்வித் துறை ஆண்டறிக்கை - விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

21 views

தடுப்பூசி போடும் தமிழகம் - தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

30 views

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - சிறப்பு உணவாக சிக்கன் கறி, மட்டன் சூப்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...

12 views

தடை செய்த பிறகும் தொடர்ந்து விளையாட்டு - போலீசில் வசமாக சிக்கிய பப்ஜி மதன்

தடை செய்த பிறகும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி யூட்யூபில் நேரலையில் ஒளிபரப்பியதோடு, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக யூட்யூப் பிரபலம் ஒருவருக்கு சிக்கல் வலுத்துள்ளது...

12 views

மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பு சின்னம் - அருங்காட்சியகம், நினைவுச் சின்னம் திறப்பு

மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பார்வையிட, வரும்16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.