கோவை, திருப்பூர், ஈரோட்டில் சற்றும் குறையாத கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு சரசாரியாக அப்படியே தொடர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
x
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு சரசாரியாக அப்படியே தொடர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட கோவையில் இதுவரையில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 3 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 
இதில் 28 ஆயிரத்து 484 பேர் கடந்த 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் 7 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 235 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 189 பேர் கடந்த வாரத்தில் உயிரிழந்து உள்ளனர் கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்ற வாரத்தில் 31 ஆயிரத்து 578-ல் இருந்து 38 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 59 ஆயிரத்து 563 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 463 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்ற வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 582 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், 127 பேர் உயிரிழந்து உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 31 ஆயிரத்து 504-ல் இருந்து 17 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 54 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 340 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 12 ஆயிரத்து 582  பாதிப்புக்களும், 83 உயிரிழப்புக்களும் சென்ற வாரத்தில் பதிவானவை. ஈரோட்டில் சென்ற வாரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 198-ல் இருந்து 14 ஆயிரத்து 400 ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் தொற்று குறையாமல் செல்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்