ஊரடங்கால் சுபநிகழ்ச்சிகள் ரத்து - வெற்றிலை விவசாயிகள் பாதிப்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு காரணமாக வெற்றிலை கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு காரணமாக வெற்றிலை கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளான மேல்பட்டி, வளத்தூர், கொத்தகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த வெற்றிலை பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம், திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் வெற்றிலை கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் வெற்றிலை பறிக்கப்படாமல் கொடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யபடவில்லை. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்