குழந்தைகளோடு சிறையில் உள்ள கைதிகள்; பரோலில் விடுவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழக சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை, முறையீடு செய்தார். 
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும், இரு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும் அறிக்கை தாக்கல் செய்தன.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், தமிழக சிறைகளில் உள்ள 7 பெண் கைதிகளை பரோலில் விடுவிக்க விரைந்து முடிவு எடுக்க  உத்தரவிட்டனர். 
சிறைக்கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து உயர் மட்ட குழு எடுக்கும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
கைதிகளை அவர்கள் உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 7-ம் தேதி தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்