புதிய அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ளவர்கள்; கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் - மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
x
தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், இதற்கான முதல் தவணை தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 950, புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதற்காக 42 கோடியே 99 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்