ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம்; யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்ல

ராமநதி மற்றும் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு இதுவரை யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம்; யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்ல
x
ராமநதி மற்றும் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு இதுவரை யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ராமநதி மற்றும் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம்  கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று நிறுத்தப்பட்டது,. இந்நிலையில் தர்மராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.அதற்கு கிடைத்த பதிலில், இத்திட்டத்திற்கு நிலம் கொடுக்க மொத்தம் 362 உரிமையாளர்களின் சம்மதம் பெற வேண்டியுள்ளதாகவும் இதுவரை 70 சதவீதம் நில உரிமையாளர்களிடம்  இருந்து சம்மத கடிதம் பெறப்பட்டுளதாகவும் கூறப்பட்டுள்ளது,.மேலும்  சம்மத கடிதம் கொடுத்தவர்களில் இதுவரை யாருக்கும் நிலை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களுக்கு நில இழப்பீட்டு தொகை வழங்கப் பட்ட பின்புதான் பணிகளை தொடங்க வேண்டும் என்ற பொதுவான ஆட்சேபனை உள்ளது எனவும் திருநெல்வேலி சிறப்பு திட்ட கோட்டம் உதவிப் பொறியாளர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்