டவ்-தே புயல் காரணமாக தொடர் கனமழை நீரில் மூழ்கிய மலை காய்கறிகள் - விவசாயிகள் வேதனை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டவ்தே புயல் காரணமாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
டவ்-தே புயல் காரணமாக தொடர் கனமழை நீரில் மூழ்கிய மலை காய்கறிகள் - விவசாயிகள் வேதனை
x
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டவ்தே புயல் காரணமாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஊட்டியில் டவ்தே புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் கூடிய மழையால், தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக கோடப்பமந்து, தலையாட்டுமந்து பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டி, கோடநாடு, தொட்டபெட்டா, மைனாலா, கப்பச்சி, தும்மனட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் அருகே உள்ள முகாம்களில் தங்கிக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 20ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்