ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை திட்டி அவரது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை திட்டி அவரது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் உள்ளார். அவர்  ஓம்சக்தி நகர் ரேஷன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக 
2  ஆயிரம் ரூபாய்  வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டுள்ளார். 
அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஊராட்சி தலைவர் சீனிவாசனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.  பின்னர் சீனிவாசனின் அலுவலகத்திற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட நபர்கள், அவரையும், உடன் இருந்தவர்களையும் சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அதன்பேரில் பரமேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்