ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு | Aavin

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை முதல் விற்பனையாக உள்ளன.
x
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை முதல் விற்பனையாக உள்ளன.  

நீல நிற பாக்கெட்டில் வழங்கப்படும் சமன்படுத்தப்பட்ட பால் தற்போது 1 லிட்டர் 43 ரூபாயாக உள்ள நிலையில், 3 ரூபாய் குறைக்கப்பட்டு, 40 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளது.

நீல நிற பாக்கெட்டில் வழங்கப்படும் அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பாலின் விலை தற்போது, 21 ரூபாய் 50 காசுகளாக உள்ள நிலையில், புதிய விலை 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பச்சை நிற பாக்கெட்டில் வழங்கப்படும் நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 23 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய விலை 22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வழங்கப்படும் அரை லிட்டர் நிறை கொழுப்பு பால் தற்போது 25 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படும் நிலையில்,
24 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பிங்க் நிற பாக்கெட்டில் வழங்கப்படும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்
அரை லிட்டர் தற்போது 20 ரூபாயாக உள்ள நிலையில்,
18 ரூபாய் 50 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

டீமேட் பாலின் விலை 1 லிட்டர் 60 ரூபாயாக உள்ள நிலையில், 3 ரூபாய் குறைக்கப்பட்டு, 57 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்