பி.எம். கேர்ஸ் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும் - மனு

பிஎம் கேர் நிதியை கொண்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும், மருத்துவ கருவிகளை வாங்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.எம். கேர்ஸ் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும் - மனு
x
இது தொடர்பாக வழக்கறிஞர் விப்லவ் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், நாடு முழுவதிலும் 738 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள்,  ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ கருவிகளை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் இலவசமாக சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதற்கான நிதியினை பிஎம் கேர்ஸ் எனப்படும் பிரதமரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் வழங்கிய நிதி உதவியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல மத்திய, மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பின் கீழ் வரக்கூடிய தனியார் மற்றும் சேவை மருத்துவமனைகளில் உடனடியாக மேற்கூறிய வசதிகளை உருவாக்க உத்தரவிடுமாறும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வெளிப்படைத்தன்மையுடன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு தனியாக மனுதாரர் கடிதம் எழுதியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்