நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
x
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களால், ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்ட நிலையில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது

மற்ற கடைகள் திறக்க தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிகளவு கூட்டம் கூடுவதால் கடைகளை பரவலாக பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏடிஎம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என்றும்........ காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தேநீர் கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிக தூரம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் மின் வணிக சேவைக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மின் வணிக சேவைக்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்