16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11ம் தேதி தொடக்கம்
பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 11ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை கலைவாணர் அரங்கில் 11ம் தேதி காலை 10 மணிக்கு முதல் கூட்டத்தொடர் தொடங்கும் எனவும்,
அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்
எம்.எல்.ஏக்களாக தேர்வானவர்கள், சட்டப்பேரவைக்கு தேர்தல் சான்றிதழை கொண்டு வருமாறு பேரவை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்
மேலும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் 12ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
Next Story

