தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்குள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
x
தமிழகத்திற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்குள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களில் கூடுதலாக 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை ஏற்படும் என சுட்டிக் காட்டியுள்ளார். தமிழகம், ஆந்திரா, கேரள அரசுகளுடன் மத்திய தொழில் வளர்ச்சித் துறை நடத்திய ஆலோசனையில், கேரளாவில் இருந்து 4 நாட்களுக்குள் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேபோல ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 60 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஆக்சிஜனை உடனடியாக வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ரயில் மூலம் குறைந்தபட்சம் 20 ஆக்சிஜன் கண்டெய்னர்களை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 



Next Story

மேலும் செய்திகள்