தமிழகத்தின் 14வது முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா

தமிழகத்தின் 14வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.
தமிழகத்தின் 14வது முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா
x
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்றக் குழுத்தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன்படி, இன்று  காலை 9 மணியளவில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடக்கிறது. ஸ்டாலினுடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கொரோனா பரவலால், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்