"கல்வி கட்டணத்தை 4 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம்" - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுங்கு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கல்வி கட்டணத்தை 4 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
x
கொரானா காலகட்டத்தில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி கட்டணத்தை மாணவர்கள் ஒரே தவணையாக செலுத்த நிர்பந்திக்க கூடாது என்றும், 4 தவணைகளாக வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  அதேபோன்று கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எந்த காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்க கூடாது என்றும், மாத ஊதியத்தை உரிய முறையில் செலுத்த வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள வேறு கல்லூரிகளில் இணையதள வசதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்