புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை
x
சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 20ஆம் தேதி வரை புறநகர் ரயில்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்களப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இ - காமர்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோர் உரிய அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள், மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

card 5
முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனவும், பொதுமக்கள் ஆன்லைன் வசதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்