சாதி வாரி கணக்கெடுப்பு தேவை - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்பு தேவை - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்திய இனத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என அதில் அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்