சென்னை அம்மா உணவகத்தில் தாக்குதல்; 2 திமுக தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
சென்னையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், ஜெயலலிதா புகைப்படத்துடன் இருந்த பதாகைகளை சிலர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன், ஸ்டாலின் அறிவுரையின்படி இருவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை அதே இடத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்