தமிழகத்தின் பல இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம், வருகிற 29ஆம் தேதி வரை நீடிக்கிறது.
x
 இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம், வருகிற 29ஆம் தேதி வரை நீடிக்கிறது.  இதனால் வழக்கத்தைவிட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.  இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால், காலை முதல் மாலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் எனவும் கூறியுள்ளது. 
அதேபோல், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்