ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி - கண்காணிக்க குழு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், தூத்துக்குடி எஸ்.பி., உதவி ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். கண்காணிப்பு குழுவின் மேற்பார்வையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை இந்த குழு கண்காணிக்கும். ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான பணியாளர்கள் குறித்த முடிவுகள் அனைத்தையும், இந்த கண்காணிப்பு குழுவே தீர்மானிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது ஆலையின் அருகே உள்ள குடியிருப்புகள், ஆக்சிஜன் உற்பத்தியால் பாதிக்கப்படாததை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்கு ஒரு முறை தமிழக அரசிடம் கண்காணிப்பு குழு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்