ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. 

கொரோனா பரவல் அதிகரிப்பால், ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அனுமதி அளிக்குமாறு, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனிடையே, தமிழகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே அங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும்,,,,

தாமிர ஆலைக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ஆலைக்குள் செல்லும் நபர்களின் விவரங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும் என்றும் 

இது தொடர்பான கண்காணிப்பு குழுவில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பிரதிநிதிகள், தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.   

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஜூலை இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்