ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதி - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன்னில், வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதி - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன்னில், வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவது, ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்தவாரம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில்,  மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், படுக்கை வசதி, ரெம்டெசீவர் உள்ளிட்ட மருந்து கையிருப்பு ஆகியவற்றின் விரிவான அறிக்கையை  தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன், 1050 டன் என உச்ச நீதிமன்றத்தில் கூறியதாகவும்,

ஆனால், அதில் வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயு வடிவில் உள்ள ஆக்சிஜனை, மருத்துவ பயன்பாட்டுக்கான, திரவ ஆக்சிஜனாக மாற்றும் ஆலையை நிறுவ, 9 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்