"ஸ்டெர்லைட்டை விட்டால் வேறு ஆலை இல்லையா?" - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட்டை விட்டால் வேறு ஆலை இல்லையா? - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி
x
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்து நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடிய மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது 240 டன் ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் நிலையில், 400 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஒருவேளை அதிகம் தேவைப்பட்டால் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அதிகம்  உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்கள் உயிர்நீத்து நடத்திய போராட்டத்தைப் பொருளிழக்க செய்யும் விதமாக அமைந்துவிடக்கூடாது எனவும், பெருந்தொற்று காலத்தில் போராட்டம் நடத்த தூதுவிடும் இந்த முடிவை மாற்ற வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்