"சனிக்கிழமை இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை சனிக்கிழமையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
x
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி உண்ணும் வழக்கத்தை விட்டுக் கொடுக்காத மக்கள், சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் குவிந்தனர். அப்போது, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக… மீன் சந்தைகள், மீன் கடைகள், கோழி உள்ளிட்ட இதர இறைச்சிக் கடைகளை, சனிக்கிழமையும் திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்