வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.
வாக்கு  எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
x
கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.  அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைகாக கரூரில் ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாக கூறினார். இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என காட்டமாக கூறிய நீதிபதிகள், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி உத்தரவிட நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.  இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்