கடனை திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள்; தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கல்விதுறை அதிரடி உத்தரவு

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று, திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள் மீதும், சம்பளத்தில் மாதம் மாதம் கடனை பிடித்தம் செய்யாமல், மேலும் மேலும் கடன் வாங்க அனுமதித்த தலைமை ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
கடனை திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள்; தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கல்விதுறை அதிரடி உத்தரவு
x
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,  திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள் மீதும், சம்பளத்தில் மாதம் மாதம் கடனை பிடித்தம் செய்யாமல், மேலும் மேலும் கடன் வாங்க அனுமதித்த தலைமை ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை, பெரும்பாலானோர்  அதனை திரும்ப  செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது,.  

பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது எனவும்,  

ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கல்வித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தா ததால்  பெரும்  இழப்பு ஏற்படுவதாக பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ள கல்வித்துறை,

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது,.

மேலும் ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, கடன் பெற்ற தொகையினை பிடித்தம் செய்யாமல். முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்