வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு இன்று முதல் இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
x
வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு இன்று முதல் இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள  எல்லைகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதன்படி இன்று முதல் வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது,. இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்குள் வருபவர்கள் குறித்த தகவல்களை முழுமையாக திரட்டும் வகையில் மாவட்ட எல்லைகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,. கங்கை கொண்டான், வசவப்பபுரம், கிருஷ்ணாபுரம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில்  சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்,. அதேபோல் சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களின்  பதிவு எண்களையும் பதிவு செய்யும் வகையில் பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்