தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு; பிற மாநிலங்களுக்கு திருப்புவது நியாயமில்லை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு தேவை இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் திருப்பி விடுவது நியாயமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு; பிற மாநிலங்களுக்கு திருப்புவது நியாயமில்லை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
x

தமிழகத்திற்கு தேவை இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் திருப்பி விடுவது நியாயமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் பெறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஆக்சிஜன் உற்பத்தி திறன் 440 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், வரும் நாட்களில் தேவை 450 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மாநிலத்தில் தற்போது ஆக்சிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில்,  

தவறான தரவுகளின் அடிப்படையில் தமிழகத்திற்கான 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு போதுமானது என கணக்கிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு தேவை இருக்கும் போது  ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜனை திருப்பி விடுவது நியாயமற்றது எனக் கூறியுள்ளார். 

மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவிற்கு திருப்பி விடுவதை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Next Story

மேலும் செய்திகள்