551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதம அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க பிரதமரின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்  என பிரதம அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்யும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்றும் இதற்கான நடைமுறைகள் மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் நடைபெறும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்