தூய்மை பணியாளர்களுக்காக 100 பேருந்துகள் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 24, 2021, 10:05 PM
சென்னையில் நாளை தூய்மை பணியாளர்களுக்காக நூறு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 100 பேருந்துகள் இயக்கப்படும் என்று, மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் தூய்மை பணியாளர்கள் உரிய அடையாள அட்டையுடன், முகக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அல்லாத வேறு யாரும், இந்த பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்றும், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.